சுவிட்சர்லாந்தின் பிங்க் நிற சொக்லேட்டுகள்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பேர்ரி கால்பாட் என்ற நிறுவனம் புதிய பிங்க் சொக்லேட்டை தயாரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கோகோ தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான பேர்ரி கால்பாட், கடந்த 13 ஆண்டுகளாக ரூபி கோகோ விதைகளில் இருந்து இளஞ்சிவப்பு வண்ண சொக்லேட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பிங்க் நிற சொக்லேட்டுகள், சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து பேர்ரி கால்பாட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கூறுகையில், இயற்கையான முறையில் தயாரிக்க வேண்டும் என்பதற்காக எந்தவித செயற்கை வண்ணமோ, நறுமணமோ சேர்க்கப்படவில்லை.

இந்த பிங்க் நிற சொக்லேட்டுகள் வரலாற்றில் ஒரு மைல்கல் என தெரிவித்துள்ளார்.

புளிப்பு சுவை மிக்கதாக காணப்படும் இந்த சொக்லேட்டுகள், இன்னும் ஆறு மாதங்களில் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்