எனக்கு அடைக்கலம் கொடுத்த கனடா, இலங்கையருக்கும் உதவ வேண்டும்: உருகும் பிலிப்பைன்ஸ் பெண்!

Report Print Balamanuvelan in கனடா

முக்கிய ரகசிய அரசு ஆவணங்கள் லீக்காவதற்கு காரணமாக இருந்ததற்காக அமெரிக்காவால் தேடப்படும் முன்னாள் தேசிய உளவுத்துறை ஏஜன்சி பணியாளரான நபர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சிக்கலிலிருந்த ஒரு குடும்பத்திற்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது.

Edward Snowden, அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்கள் லீக்காவதற்கு காரணமாக இருந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் ஒருவர்.

அவரை மறைத்து வைப்பதற்காக, கனடாவைச் சேர்ந்தவரான அவரது வழக்கறிஞர் ராபர்ட், ஹாங்காங்கிலிருக்கும் சில புகலிடக் கோரிக்கையாளர்களின் உதவியை நாட, அவர்களும் தங்களைப்போலவே நாடிழந்து அவதியுறுபவர் என்றெண்ணி, மனமிரங்கி அவரை மறைத்து வைக்க உதவ, முன் வந்தனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த Supun Thilina Kellapatha, அவரது மனைவி Nadeeka Dilrukshi Nonis மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், Ajith Pushpakumara என்னும் ஒருவர் ஆகிய சிலருடன் பிலிப்பைன்சைச் சேர்ந்த Vanessa Rodel (42)ம் ஒருவர்.

Vanessa தனது ஏழு வயது மகள் Keanaவுடன் ஹாங்காங்கில் புகலிடக்கோரிக்கையாளராக வசித்து வந்தார்.

ஆனால் ஹாங்காங் அதிகாரிகள் Snowdenஐக் குறித்து அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க, Vanessa ஒத்துழைக்க மறுக்கவே, அவருக்கு அரசு வழங்கி வந்த உதவிகள் நிறுத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டார்.

இதனால் பிலிப்பைன்சுக்கே நாடு கடத்தப்படும் இக்கட்டான சூழலுக்கு உள்ளானார் Vanessa.

பிலிப்பைன்சில் Vanessa கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டு, தீவிரவாதக் குழு ஒன்றால் பாலியல் அடிமையாக ஆக்கப்பட்டு, பின் அங்கிருந்து தப்பி ஹாங்காங் சென்றவர்.

இப்படியிருக்கும் நிலையில் திரும்ப அவர் ஹாங்காங்கிற்கு நாடு கடத்தப்பட்டால் அவரது நிலைமை என்ன ஆகும் என்று எண்ணிக்கூட பார்க்கமுடியாது. இப்படிப்பட்ட சூழலில்தான், கனடா, Vanessaவையும் அவரது மகளையும் அகதிகளாக ஏற்றுக் கொள்ள முன்வந்தது.

இதனால், இன்று கனடா வந்துள்ள Vanessaவும் அவரது மகளும் இனி Montrealஇல் தங்கள் புது வாழ்வை தொடங்க இருக்கிறார்கள்.

கனடா தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கும் Vanessa, இருந்தாலும் தன்னைப்போலவே இன்னும் ஹாங்காங்கில் சிக்கி தவிக்கும் இலங்கையைச் சேர்ந்த மற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், தன்னால் முழுமையாக மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை என்கிறார்.

எனவே தனக்கு அடைக்கலம் கொடுத்து தன்னை மகிழச்செய்தது போலவே, இலங்கையைச் சேர்ந்த மற்ற புகலிடக் கோரிக்கையாளர்களும் அதே மகிழ்ச்சியை அடையச் செய்ய, கனடா விரைந்து உதவ முன் வர வேண்டும் என்கிறார் Vanessa.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers