கனடாவில் மாயமான அழகான 15 வயது சிறுமி இன்னும் கிடைக்கவில்லை! வெளியான அவரின் புகைப்படங்கள்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கடந்த 13ஆம் திகதியிலிருந்து காணாமல் போன 15 வயதான அழகான சிறுமி இன்னும் கிடைக்கவில்லை என பொலிசார் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளனர்.

டொரண்டோ பொலிசார் கடந்த 15ஆம் திகதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஏஞ்சிலிகா வைரட்மேன் (15) என்ற சிறுமி கடந்த 13ஆம் திகதி கடைசியாக Meadowvale/ Lawrence Ave பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் உயரம் 5 அடி 3 அங்குலம் எனவும், காணாமல் போன அன்று நீல நிற ஷார்ட்ஷும், பிங்க் நிற மேலாடையும் அணிந்திருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட பதிவில், சிறுமி ஏஞ்சிலிகா இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் நலமாக இருக்கிறாரா என்ற கவலை எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் ஏஞ்சிலிகாவின் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers