இதுவொன்றும் எங்களுக்கு புதிதல்ல: கனடாவில் கொரோனாவால் சீனத்து மக்களின் பரிதாப நிலை

Report Print Arbin Arbin in கனடா

கொரோனா வியாதி தொடர்பில் கனடாவில் சீனத்து மக்களை இனவாத ரீதியாக துன்புறுத்தப்படுவது உரியவர்கள் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வியாதி பாதிப்பு வியாபித்து வருகிறது.

சீன அரசாங்கத்தின் கணக்குகள்படி இதுவரை 492 பேர் கொரோனா பாதிப்புக்கு மரணமடைந்துள்ளனர். சுமார் 23,874 பேர் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

அதில் 2,792 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கனேடிய சீனர்களை இங்குள்ள மக்கள் இனவாத துன்புறுத்தலுக்கு இரையாக்குவதாக புகார் எழுந்துள்ளது.

முன்னர் சார்ஸ் வைரஸ் பாதிப்பின் போதும், கனடாவில் சீனத்து மக்கள் மீது இதே துன்புறுத்தல் நீடித்ததாகவும் தற்போது 23 வயதாகும் இளைஞர் ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.

சார்ஸ் வைரஸ் பரவிய காலகட்டத்தில் தமது வெறும் 6 வயது என கூறும் அவர், பாடசாலையில் அந்த வயதில் தமக்கு ஏற்பட்ட கிண்டலும் கேலியும் வடுவாக இன்றும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் எங்களுடன் விளையாட முடியாது, ஏனென்றால் எல்லா சீன மக்களுக்கும் சார்ஸ் கிருமி உள்ளது என ஒதுக்கி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீன கனேடியர்களை ஒரு வைரஸ் தொடர்பில் குற்றம் சாட்டுவது மனிதாபிமானமற்றது மற்றும் குறைத்து மதிப்பிடுவது.

இச்செயல் குழந்தைகளுக்கு குறிப்பாக தீங்கு விளைவிக்கும் என அந்த இளைஞர் தமது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் பரவியபோதும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் 8,000 க்கும் மேற்பட்ட சார்ஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன,

மேலும் இந்த தொற்றுநோய் கனடா உட்பட 26 நாடுகளுக்கு பரவியது, இதில் சீனாவுக்கு வெளியே மட்டும் 44 பேர் நோயால் இறந்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers