கோடீஸ்வரரை கொன்று உடலை 108 துண்டுகளாக வெட்டிய உறவினர்: ஏதற்காக? கனடாவை உலுக்கிய வழக்கில் தண்டனை அறிவிப்பு

Report Print Basu in கனடா

சீன கோடீஸ்வரரைக் கொன்று உடலை வெட்டிய நபருக்கு கனடாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் லி ஜாவோ தனது உறவினரும் கோடீஸ்வரருமான கேங் யுவானை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

திங்களன்று கனடா நீதிமன்றம் ஜாவோவுக்கு 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது.

சீன கோடீஸ்வரர் யுவான் ஜாவோவின் மனைவியின் உறவினர் ஆவார். மேற்கு வான்கூவரில் உள்ள யுவானுக்கு சொந்தமான மாளிகையில் யுவான், ஜாவோ மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

42 வயதான யுவான், பெட்ரோலியம் மற்றும் நிலக்கரித் தொழில்களில் இருந்து தனது மில்லியன்களை சம்பாதித்த செல்வந்தர் ஆவார், யுவான் பல முறை திருமணம் செய்துள்ளார்.

மே 2, 2015 அன்று, ஜாவோவின் ஒரே குழந்தையான அவரது மகள் ரியாலிட்டி ஷோ நட்சத்திரமான புளோரன்ஸ் ஜாவோவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஜாவோவிடம் யுவான் கூறியுள்ளார்.

BBC

இதனால் ஜாவோ கோபமடைய இரண்டு பேரும் சண்டையிட்டுள்ளனர், ஜாவோ இறுதியில் யுவானை சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர், யுவானின் உடலை 108 துண்டுகளாக நறுக்கி உடல் பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.

இதை கண்டுபிடித்த ஜாவோவின் மனைவியும், மாமியாரும் பொலிசில் புகார் செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஜாவோ 2015 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திங்களன்று கனடா நீதிமன்றம் ஜாவோவுக்கு 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது.

ஜாவோ 2015 முதல் விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்கப்பட்டுள்ளார். திங்களன்று வழங்கப்பட்ட தண்டனை இதை கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது, ஒவ்வொரு நாளும் காவலில் வைக்கப்பட்டிருப்பது அவரது தண்டனைக்கு 1.5 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

மேலும் ஜாவோவுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைவாசம் மட்டுமே என நீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்