சீட் பெல்ட் அணியாததால் விபரீதம்! அமெரிக்காவில் பரிதாபமாக உயிரிழந்த கனடியர்

Report Print Raju Raju in கனடா
0Shares

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் கனடியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஒன்றாறியோவை சேர்ந்த வில்லியன் வில்காக்ஸ் (65) என்பவர் அமெரிக்காவின் கேஸ் சிட்டியில் உள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை அன்று செமி டிராக்டர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மதியம் 11.25 மணியளவில் அவரின் வாகனம் மரங்களின் மீது வேகமாக மோதியது.

இதில் சீட் பெல்ட் அணியாத வில்லியம் பரிதபமாக உயிரிழந்தார்.

அவர் வேகமாக வாகனத்தை இயக்கினார் என தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்