இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் விலகல்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்டகாரர் ஜேசன் ராய் எதிர்வரும் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜேசன் ராய் எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 உலகக் கோப்பை தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ள ஜேசன் ராய், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசி 215 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவர் அதிகபட்சமாக வங்க தேச அணிக்கு எதிராக 153 ஓட்டங்கள குவித்தார்.

எதிர்வரும் யூன் 18ம் திகதி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் உடனான போட்டியிலும், அதை தொடர்ந்து யூன் 21ம் திகதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் ஜேசன் ராய் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்டாகரர் ஜேசன் ராய்-க்கு பதில் அந்த அணியில் யார் இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers