ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. 15 வயதில் கும்ப்ளேவின் சர்வதேச சாதனையை எட்டிய சிறுவன்: குவியும் பாராட்டுகள்

Report Print Basu in கிரிக்கெட்

16 வயதுக்கு உட்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் கோப்பை போட்டியில் மேகாலயா அணியில் விளையாடிய 15 வயது சிறுவன் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

நாகாலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேகாலயா அணியில் வெளிமாநில வீரராக விளையாடிய மீரட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் நிர்தேஷ் பைசோயாவே இச்சாதனை படைத்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது நினைவுக்கூரதக்கது.

நாகாலாந்து அணிக்கு எதிராக 21 ஓவர்களை வீசிய பைசோயாவே, 10 மெய்டேன் எடுத்து 51 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். நாகாலாந்து அணி முதல் நாளிலே முதல் இன்னிங்ஸில் 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதுகுறித்து பேசிய பைசோயா, கும்ப்ளே சாதனை படைத்த போது நான் பிறக்கவில்லை. ஆனால், அது குறித்து நான் நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அதே போல் சாதனை படைக்க வேண்டும் என நினைத்தேன்.

Twitter

என் வாழ்க்கையில் அதை இவ்வளவு சிக்கிரமாக எட்டிவிடுவேன் என எதிர்பார்கவே இல்லை. இதுகுறித்து என் பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் உணர்ச்சி வசப்பட்டனர்.

அணி வீரர்கள் என்னால் முடியும் என மிகுந்த நம்பிக்கை அளித்தனர் என ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த 15 வயது வீரர் பைசோயாவே தெரிவித்துள்ளார். பைசோயாவேயின் இச்சாதனை பலரும் பாராட்டி வருகின்றனர்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்