கொரோனாவை எதிர்த்து போராட மைதானத்தை வழங்க தயார்..! உறுதியளித்த கங்குலி

Report Print Basu in கிரிக்கெட்
285Shares

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்க ஈடன் கார்டன் மைதானத்தை வழங்க தயார் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவிற்கு 10 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் தாக்கத்தால் உலகம் முழுவதும் கிரிக்கெட், கால்பந்து, ஒலிம்பிக் உட்பட அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்க மேற்குவங்க அரசாங்கம் ஈடன் கார்டன் மைதானத்தை கோரினால், வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் கண்டிப்பாக நாங்கள் மைதானத்தை தனிமைப்படுத்தும் மையத்திற்காக அளிப்போம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை என கங்குலி உறுதியளித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்