கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினாலும்!.... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்

Report Print Kavitha in நோய்

சீனாவில் தொடங்கி பல உலக நாடுகளையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் நோயாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது.

இதற்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதற்கான கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடிய வைரஸால் பல ஆயிரம் மக்கள் நாளுக்கு நாள் இறந்த வண்ணமும் நோயாளிகளின் எண்ணிக்கைகள் அதிகரித்த வண்ணமே தான் உள்ளது. இதில் சிலர் குணமடைந்தும் உள்ளனர்.

இதற்கிடையே சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவுடன் மீண்டும் இந்த வைரஸ் தாக்குமா? என்ற சந்தேகம் பலரிடையே இன்று வரை காணப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு பின் குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் இந்த வைரஸ் தாக்குமா? என்று இங்கு பாரப்போம்.

மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுமா?

உலக சுகாதார நிறுவனம், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பரவக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் அடுத்த 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் என்று கூறப்படுகின்றர்.

இந்நிலையில் 'கொரோனாவால் குணமடைந்த பின்னர் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா இல்லையா என்பது உறுதியாக கூற முடியாது' என்று மூத்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது, அடுத்த 2 வாரங்களுக்கு அவர்கள் தனியாகவும் நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் தாங்கள் பருகும் பானங்கள் மீது சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்கள் மனநலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு என்ன முன்னெச்சரிக்கை எடுக்கலாம்?

  • கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி மிகவும் அவசியம். இதனால் பள்ளிகள், அலுவலகங்கள், திரையரங்குகள், பொது நிகழ்வுகள் கலந்து கொள்ளலாம் இருப்பது சிறந்தது.

  • முதியவர்கள் தங்கள் பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது மற்றும் கூட்டமான இடங்கள் மற்றும் பொது வாகனங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

  • கொரோனா தொற்றைத் தவிர்க்க , அடிக்கடி கைகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

  • சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.

  • தும்மல் அல்லது இருமல் ஏற்பட்டால், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு மூக்கை மூடிக் கொண்டு தும்மவும் அல்லது இருமவும். அதன்பின்னர் உடனடியாக கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை அப்புறப்படுத்தவும்.

  • கொரோனா பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் நபர் அல்லது இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

  • ஒருவேளை கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவசியம் நீங்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

  • வீடு , அலுவலகம், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்கவும்.

  • மருத்துவமனை செல்ல நேர்ந்தால் தேவையில்லாமல் எந்த இடத்தையும் தொட வேண்டாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...