Infrastructure Management- சிறப்புகளும், வேலைவாய்ப்புகளும்

Report Print Raju Raju in கல்வி

Infrastructure Management துறை இன்று இளைஞர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினால் அது மிகையாகாது.

இதில், நடைமுறைப்படுத்துதல், கொள்கை உருவாக்கம், பொருளாதாரம், சமுதாயம், சட்டம் மற்றும் அரசியல் கட்டமைப்பு என பல வகையான கட்டமைப்புகள் பற்றி கற்றுத்தரப்படுகிறது.

Infrastructure Management என்பது எம்.பி.ஏ முதுகலை பட்டப்படிப்பாகும். ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்துறையை தாராளமாக தெரிவு செய்யலாம்.

இந்தியாவில் இதில் சேர GATE, MAT, GMAT, JMAT போன்ற பல தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்.

இத்தேர்வுகளை மேலாண்மை கல்வி நிறுவனங்கள் நடத்தி அதன் மூலம் மாணவ சேர்க்கையை நடத்துகின்றன.

இரண்டாண்டுகள் இப்பட்டப்படிப்பை படிக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகளும் Infrastructure Management துறையில் கொட்டி கிடக்கிறது. இப்படிப்பை முடித்தவர்கள் பொருளாதார நிபுணராக கூட ஆகலாம்.

அதோடு, வங்கியியல், தொழிற்கூடம், தொழிற் நிர்வாகம் மற்றும் அதற்கு தொடர்பான பணிகளும் குவிந்துள்ளன.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers