ஐரோப்பாவில் கொரோனாவால் குறைந்த வயதில் உயிரிழந்த சிறுமி!

Report Print Santhan in ஐரோப்பா

பெல்ஜியமில் 12 வயது சிறுமி ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்த நிலையில், இவர் ஐரோப்பாவில் குறைந்த வயதில் கொரோனாவால் உயிரிழந்தவராக அறியப்படுகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக பெல்ஜியமில், 12,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 705 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிருக்கும் 12 வயது சிறுமி ஒருவர் மூன்று தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸிற்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதில் அவருக்கு நேர்மறையான சோதனை வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு மோசமான நிலையை எட்டியுள்ளார்.

இதையடுத்து இவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரின் இறப்புக்கு முன் போர்ச்சுகலை சேர்ந்த Vitor Godhino என்ற 14 வயது சிறுவனே ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் குறைந்த வயதில் உயிரிழந்த நபராக நம்பப்பட்டது.

தற்போது அந்த வயதிற்கும் குறைவாக 12 வயது சிறுமி இறந்துள்ளதால், இவரே ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் குறைந்த வயதில் உயிரிழந்தவராக அறியப்படுகிறது.

பெல்ஜியத்தின் கொரோனா வைரஸ் விஞ்ஞான குழுவில் உள்ள மருத்துவர் Emmanuel Andre, இது ஒரு கடினமான உணர்ச்சிகரமான தருணம்.

ஏனெனில் இது ஒரு குழந்தையைப் பற்றியது. இது மருத்துவம் மற்றும் கல்வி உலகையும் பாதிக்கிறது. நாங்கள் அவளுடைய குடும்பத்தினரையும் அவளுடைய அன்புக்குரியவர்களையும் நினைத்துக்கொண்டிருக்கிறோம், தொடர்பில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்