ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா! இதை குறைக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிகை

Report Print Santhan in ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கு மேல் சென்றுள்ளது. குறிப்பாக தற்போது பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் கடந்த ஒரு மாத காலமாகவே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதில் கவனம் செலுத்த வேண்டும். தனிமைப்படுத்துதல் நாட்களை குறைப்பது தவறு, 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தால் மட்டுமே, உடலில் கொரோனா வைரஸ் இருப்பதை அறிய முடியும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இதன் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்