கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் உடல் யார் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா? நெகிழ்ச்சி தகவல்

Report Print Santhan in கால்பந்து
697Shares

அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் உடல் பெற்றோர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் டிகோ மாரடோனா கடந்த 25-ஆம் திகதி தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

60 வயதான மரடோனா கடந்த 2 வாரத்திற்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், உயிரிழந்தார்.

இவரின் இறுதி ஊரவலத்தின் போது, அங்கிருந்த ரசிகர்கள் பலரும் கதறி அழுத வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில், மாரடோனாவின் உடல் அர்ஜென்டின தலைநகர் பியூனஸ் ஏர்யஸில் உள்ள அவரது பெற்றோர்களின் சமாதிக்கு அருகே, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்