பாண்டா கரடிக்கு பெயர் சூட்டிய பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிகெட்டி மேக்ரான், பிரெஞ்சு உயிரியல் பூங்காவில் பாண்டா கரடிக்குட்டிக்கு பெயர் சூட்டியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மேக்ரான் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், அவரின் மனைவி பிரிகெட்டி மேக்ரானுக்கு ’பிரான்சின் முதல் பெண்மணி’ என்னும் அந்தஸ்த்தினை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பிரிகெட்டி, பிரான்சில் உள்ள Beauval உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாண்டா கரடிகள் மூலமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குட்டி ஒன்று பிறந்தது.

அது தான் பிரான்சில் பிறந்த முதல் பாண்டா கரடிக்குட்டி என்பதால், அதற்கு ‘Godmother' என பிரிகெட்டி பெயர் சூட்டினார்.

பின்னர், பிரிகெட்டி மேக்ரான் கூறுகையில்,

‘இந்த பாண்டா குட்டியின் மூலமாக, பிரான்ஸ் மற்றும் சீனாவிற்கு இடையே வரலாற்று உறவு ஏற்பட்டுள்ளது. இது நாம் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய தருணம்.

பிரான்ஸ், சீனா இடையே நட்புறவை மேம்படுத்துவதற்கான பொறுப்பு நம்மிடம் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

அழிந்து வரும் விலங்கினமாக, 1980களில் கண்டறியப்பட்ட பாண்டா கரடிகளின் எண்ணிக்கையை, அதிகரிக்கச் செய்ய பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகள் 2012ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தை நடத்தின.

அதன்படி, ஒரு பெண் கரடியும், ஒரு ஆண் கரடியும் Beauval பூங்காவிற்கு 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்