ஒரு பக்கம் துப்பாக்கி முனையில் கொள்ளை... மறுபக்கம் சாதாரணமாக சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் உணவகம் ஒன்றில் ஒரு பக்கம் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துக்கொண்டிருக்க, மறுமுனையில் வாடிக்கையாளர்கள் சாதாரணமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கிழக்கு பிரான்சில் Lyon நகரில் அமைந்துள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகம் ஒன்றில் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

ஒரு பக்கம் கொள்ளையன் ஒருவன் உணவக ஊழியர் ஒருவரிடம் துப்பாக்கியை நீட்டி, பணத்தை எடு என்று கத்த, இன்னொரு பக்கத்திலோ சிலர் உட்கார்ந்து எதுவுமே நடக்காதது போல் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

ஆனால் இந்த கொள்ளை சம்பவத்தை வீடியோ எடுத்த நபரோ, தான் பயந்து நடுங்கிப் போனதாகவும், இதுபோல் யாருக்குமே இனி நடக்கக்கூடாது என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை துவக்கியுள்ள நிலையில், மறு நாள் எதுவுமே நடவாததுபோல் உணவகம் செயல்படத் துவங்கியது அதைவிட ஆச்சரியம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்