ஜேர்மனியில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம்: தீவிரவாதியின் வெறிச்செயல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
317Shares
317Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் Flensburg நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

காலை 7 மணியளவில் விரைவு ரயில் ஒன்று Flensburg நகருக்கு Cologne மற்றும் Hamburg நகரில் வழியாக பயணித்துக்கொண்டிருந்தது.

அப்போது, திடீரென கத்தியுடன நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த பயணிகளை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த கத்திகுத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட நபரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து தற்காலிகமாக இந்த ரயில் பாதை மூடப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட நபர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்