பேருந்தில் ஆபாச படம் எடுத்த பள்ளிப்பேருந்து ஓட்டுனர்: பேருந்தில் ஏற மறுக்கும் மாணவர்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் பேருந்து ஒன்றில் ஓட்டுநர் ஒருவர் ஆபாச படம் எடுத்ததையடுத்து, அருவருப்பினால் அந்த பேருந்து நிறுவனம் இயக்கும் எந்த பேருந்திலும் ஏற மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வடக்கு Rhine-Westphaliaவிலுள்ள Bad Laasphe என்னும் நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் மாணவர்களிடையே ஒரு ஆபாச வீடியோ வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் ஆபாச படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கட்டத்தில் அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநரும் அந்த படத்தில் பங்கேற்றுள்ளார்.

அதே நிறுவனம்தான் குறிப்பிட்ட பள்ளியின் பேருந்தையும் இயக்குகிறது. எனவே அது எந்த பேருந்து என்று தெரியாத நிலையில் அந்த நிறுவனத்தின் எந்த பேருந்திலும் ஏற மாணவர்கள் மறுத்துள்ளனர்.

இந்நிலையின் அந்த பேருந்து நிறுவன உரிமையாளர் அந்த வீடியோவிலிருந்தே அந்த உரிமையாளரை அடையாளம் கண்டு அவரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த குறிப்பிட்ட பேருந்து முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், அந்த நகரில் அது பயன்பாட்டுக்கு விடப்படவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers