ஜேர்மன் தேவாலயம் அருகில் துப்பாக்கிச்சூடு: பெண் உட்பட இருவர் பலி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
650Shares

ஜேர்மன் தேவாலயம் ஒன்றிற்கு வெளியே இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பெண் உட்பட இருவர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை ஜேர்மனியின் Halle நகரத்தில் உள்ள யூத தேவாலயம் ஒன்றிற்கருகில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யூதர்களுக்கு விசேஷமான நாளாகும். இன்று அவர்கள் Yom Kippur என்னும் முக்கிய பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

ராணுவத்தினர் போல் உடையணிந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் யூதர்களுக்கான கல்லறை ஒன்றிலும் அவர்கள் கிரனேட் வெடிகுண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பியோடிய மற்றொருவர் Leipzig நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில், அவரை சீக்கிரம் பிடிப்பதற்கான முயற்சியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் வீடுகளுக்குள்ளோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்குள்ளோ இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து Halle நகரின் முக்கிய ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்