பெங்களூரே பற்றி எரிய இவர் தான் காரணம்?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதை எதிர்த்து கர்நாடகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

அதுவும் செப்டம்பர் 12ம் திகதியை யாராலும் மறக்க முடியாது, பெங்களூரில் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த கலவரத்துக்கு முக்கியப் புள்ளியாக இருந்தது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்த கன்னட பிரகாஷ் என்பவர் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் தான் கலவரத்தை தூண்டிவிட்டார் என்றும், தமிழக பதிவெண் கொண்ட லொறிகள் எரிப்புக்கும் இவர் தான் காரணம் என பொலிசார் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இவரை பொலிசார் கடந்த 9ம் திகதியே கைது செய்துவிட்டு, பின்னர் விடுவித்ததே கலவரத்திற்கு மறைமுக காரணமாகிவிட்டது எனவும் பேசப்படுகிறது.

அன்று நடந்த கலவரத்திற்கு கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்களே முக்கிய காரணம் என்றும், அதுவும் பிரகாஷின் செல்வாக்கு நிறைந்த பகுதிகளிலேயே கலவரம் பற்றி எரிந்தது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments