தமிழகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு: அதிகரிக்கும் பதற்றம்...பொலிஸார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியானார்கள்.

இந்நிலையில் இறந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆட்சியர் மற்றும் எஸ்பி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெற்றது.

அப்போது அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியரை மக்கள் வழிமறுத்ததால் பொலிசாரின் ஒத்துழைப்புடன் ஆட்சியர் தப்பி ஓடினார்.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லுமாறு பொலிசார் கூறியும் கேட்காததால் அவர்கள் மீது 2 ரவுண்டு துப்பாக்கி சூடு மற்றும் தடியடி தற்போது நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிசார் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதோடு பொலிஸ் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டதால் அது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers