தமிழகம் முழுவதும் திரைப்படங்கள் ரத்து: நாளை அரசு விடுமுறை! ஏழு நாள் துக்கம்

Report Print Kabilan in இந்தியா

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு விழாக்கள், ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தம் என தமிழகமே முடங்கியுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு இன்று மாலை அவரது உயிரிழந்தார். இதனால் தமிழகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், அடுத்த சென்னை வரும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் நடைபெற இருந்த அரசு விழாக்கள், திரைப்பட காட்சிகள் என அனைத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துக்கத்தை அனுசரிக்கும் வகையில் தமிழக அரசு நாளை அரசு விடுமுறையை அறிவித்துள்ளதுடன், அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்