நண்பனை அடித்து விரட்டி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! நள்ளிரவில் பயங்கரம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நண்பரை அடித்து விரட்டி விட்டு, இளம் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள செல்போன் தொழிற்சாலையில், கிருஷ்ணவேனி, ராஜா ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊர் செல்வதற்காக அங்கிருக்கும் சூலூர் பேட்டை இரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று, ராஜாவை அடித்து தாக்கிவிட்டு, அவர் உடன் இருந்த பெண்ணை அருகில் இருந்த முட்புதருக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் ராஜா உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிசாருக்கு தகவல் கொடுப்பதை அறிந்த அந்த கும்பல் கிருஷ்ணவேனியை வேறு ஒரு இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், கிருஷ்ணவேனியை தேடிய போது கிடைக்காத நிலையில், அவர் சூளூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே, மயங்கிய நிலையில் அங்கிருப்பவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சூளூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, சூலூர் பேட்டையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளதாகவும், தலைமறைவாக இருக்கும் 2 பேரை பொலிசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஐந்து பேர் கொண்ட கும்பலில் ராஜாவின் நண்பர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...