துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியுங்கள்... பொள்ளாச்சி விவகாரத்தில் சகோதரிகளின் முடிவு

Report Print Abisha in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த சகோதரிகள் தங்களை துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சேர்ந்த கல்லூரி மாணவி தமிழீழம் என்பவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது சகோதரி ஓவியாவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தாங்கள் இருவரையும் தங்களுக்கான பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் பேசுகையில், பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்தியாவில் உரிய அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதும்,தனி நபர் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்