15 மாதங்களுக்குள்.... ஒரே இடத்தில் பலியான 4 சகோதரர்கள்: விலகாத மர்மம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 15 மாதங்களுக்குள் ஒரே இடத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 சகோதரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாளூர் - மண்ணுத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரத்தக்காரா என்ற பகுதியிலேயே இந்த 4 சகோதரர்களும் விபத்தில் சிக்கி கொல்லப்பட்டுள்ளனர்.

இங்குள்ள புல்லம்பள்ளம் சந்திப்பில் விபத்துகள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மரணமடைந்த குட்டன் என்பவரது 4 மகன்களும் கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்று விட்டு, இரவில் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

புல்லம்பள்ளம் சந்திப்பைக் கடந்த போது, லொரி மோதியதில் குட்டனின் மூத்த மகன் சுதாகரன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் ஏற்பட்ட விபத்தில், குட்டனின் மற்றொரு மகன் சீனிவாசன் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நடந்து சில நாட்கள் கடந்த நிலையில், குட்டனின் இன்னொரு மகனான ஆனந்தனும் புல்லம்பள்ளம் சந்திப்பில் இருந்து 300 அடி தொலைவில் பைக் மோதி இறந்துள்ளார்.

ஒரே வீட்டில் 3 பேர் பலியான பிறகும், குட்டனின் குடும்பத்தினருக்கு விபத்துகளால் ஏற்பட்ட துயரம் நீங்கவில்லை.

கடந்த சனிக்கிழமை இரவு குட்டனின் இன்னொரு மகன் உன்னி கிருஷ்ணன் புல்லம்பள்ளம் சந்திப்பில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர்கள் 4 பேரும் இரவு நேரத்தில் நடந்த விபத்தில்தான் மரணமடைந்துள்ளனர். 15 மாதங்களுக்குள் ஒரே பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 4 சகோதரர்களும் மரணமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்