நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் தொங்கவிடுகிறேன்! இரத்தத்தில் இளம்பெண் எழுதிய கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கோரி துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்திகா சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம் பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் நால்வரும் தூக்கிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

அவர்களை நான் தூக்கிட தயார் என சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை சேர்ந்த காவலர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள தன்னை அனுமதிக்கக் கோரியுள்ளார்.

மேலும் நான்கு கொடூரன்களும் பெண் கையால் தான் தூக்கிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் இரத்தத்திலேயே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...