திருமணம் ஆன காதலன் குடும்பத்தை ஒரே போன் காலில் கெடுத்த காதலி! பரிதாபமாக இறந்த மனைவி: முழு பின்னணி

Report Print Santhan in இந்தியா
4389Shares

தமிழகத்தில் கணவனின் காதல் விளையாட்டு மனைவிக்கு தெரிந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிர்ந்த நிலையில், காதலி மற்றும் அவரின் மாமியார் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார். இவர் ஷோபனா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஷோபனா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், கணவன் மற்றும் மாமியர் செய்து கொடுமைகளை வீடியோவில் சொல்லி, அதை தன் குடும்பத்தினருக்கு அனுப்பியிருந்தார்.

சென்னை ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த விஜயகுமார் வேலையிழந்ததாக கூறப்பட்டது.

அந்த வேலை இழந்ததற்கு முக்கிய காரணம் இவர் தான், ஒழுங்காக பணி செய்யாத காரணத்தினால் அந்த நிர்வாகம் இவரை பணியில் இருந்து தூக்கியுள்ளது.

ஆனால், விஜய்குமாரின் அம்மாவோ, இதற்கு எல்லாம் காரணம் இவள் வந்த நேரம் தான் என்று ஷோபனாவை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்

இதற்கிடையில், திருமணத்திற்கு முன்பு இருந்தே தன்னுடன் காதல் மொழி பேசி வந்த ஈரோட்டை சேர்ந்த முன்னாள் காதலி அனு என்பவர் விஜய்குமாரை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அனு கேட்ட பணத்தை விஜய்குமார் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த் அனு விஜய்குமார் தன்னிடம் பள்ளிப்பாளையம் சிக்கன் சமைச்சி கேட்டது தொடங்கி 3 முறை கர்ப்பத்தை கலைத்தது வரையிலான அனைத்து காதல் ரகசியங்களையும் மொத்தமாக ஷோபனாவிடம் கூறவே குடும்பத்தில் புயல் வீசியது.

இது குறித்து கேட்ட மனைவி ஷோபனாவை, கூடுதல் வரதட்சனை வாங்கிவரச்சொல்லி விஜய்குமார் அடித்து கொடுமைப்படுத்திய நிலையில் இதனால் விரக்தி அடைந்த ஷோபனா, தனது ஒரு வயது மகனை தவிக்க விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, அடித்து துன்புறுத்தி ஷோபனாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஐ.டி ஊழியர் விஜய்குமார் அவரது தந்தை அன்பழகன், தாய் செல்வராணி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் தலையை கவிழ்ந்தபடி வேகமாக சென்று வேணில் ஏறிய விஜய்குமார் உள்ளிட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஷோபனாவின் ஒரு வயது ஆண்குழந்தை அவரது விருப்பபடியே அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விஜய்குமாருக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்தே அவருடன் ஊர் சுற்றியதோடு, ஷோபனாவுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பேசி தற்கொலைக்கு தூண்டிய காதலி அனுவையும் கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்