மத்தியப் பிரதேசத்தில் 16 வயது சிறுமி தனது தந்தையை கடுமையாக தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுமி தானாக முன் வந்து காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
தந்தை குடித்துவிட்டு வந்து தாயிடம் சண்டையிட தொடங்கிய காரணத்தினால் ஆத்திரமடைந்த சிறுமி துணி துவைக்கும் மட்டையை கொண்டு தலையில் அடித்து வீழ்த்தியுள்ளார்.
மகளின் திருமணம் குறித்து பேச தொடங்கிய போது சச்சரவு எழுந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர், “தந்தை வேலை ஏதும் செய்யாமல் மூத்த மகளின் வருமானத்தில் குடும்பம் நடந்து வந்துள்ளது. அவருடைய செயல் குடும்பத்திற்கு பெரும்பாலும் பாரமாகவே அமைந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.