கோவிலுக்கு சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண்! நடுவழியில் திடீரென செய்த செயலால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா
3104Shares

குடும்பத்தார் கண்முன்னர் இளம்பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (20). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் கலபுரகி மாவட்டம் கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா தேவனாங்கோன் பகுதியில் கார் சென்றது. அப்போது அந்த வழியாக ஓடும் பீமா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் ஆற்றுப்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்வர்யாவும், அவரது குடும்பத்தினர் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஐஸ்வர்யா திடீரென்று ஆற்றில் குதித்தார். இதில் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐஸ்வர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் குதித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஐஸ்வர்யா பிணமாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த காட்சி அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது. அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.

காதல் தோல்வியால் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்