ஒழுங்காக இதை செய்யுங்கள்... ஐரோப்பா நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஐரோப்பா நாடுகளுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் சரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதனையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடை விதித்து வருகிறது.

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் செய்துள்ள பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி நாடுகளும், அமெரிக்காவைப் போலவே ஈரானின் ஏவுகணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் சரீப் அளித்துள்ள பேட்டியில், அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு வெளியே உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஈரானை விமர்சிக்கும் நிலை ஐரோப்பியாவிற்கு கிடையாது.

ஈரான் உடன் அணு ஆயுத உடன்பாடு செய்திருக்கும் ஐரோப்பிய நாடுகளும் மற்ற நாடுகளும் ஈரானுடனான பொருளாதார உறவுகளை சீர் செய்ய வேண்டும்.

இல்லையெனில், நாங்கள் எங்கள் கடமைகளை நிறுத்திவிடுவோம். சட்டத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் சரீப் கோரியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்