ஈரானின் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான் வளைகுடாவில் போரைத் தொடங்காது, ஆனால் அது தன்னை தற்காத்துக் கொள்ளும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் தெரிவித்துள்ளார்.

நோர்வே சர்வதேச விவகார நிறுவனத்தில் பேசிய ஸரீஃப், வளைகுடாவில் போர் நடந்தால்? கண்டிப்பாக அந்த போரை நாங்கள் தொடங்கியதாக இருக்காது, போரைத் தொடங்கவும் மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். ஆனால் நாங்கள் தற்காத்துக் கொள்வோம் என்று அவர் கூறினார்.

மேலும், 2015 ஆம் ஆண்டில் ஈரான் உலக வல்லரசுகளுடன் கையெழுத்திட்ட சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பிரான்ஸ் திட்டங்களில் செயல்பட ஈரான் தயாராக உள்ளது என்று ஸரீஃப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்களிடம் உள்ள திட்டங்களை செயல்படுத்தப் போகிறோம் என்று நோர்வே சர்வதேச விவகார நிறுவனத்தில் பேசிய ஸரீஃப் கூறினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை குறைக்க அல்லது ஈரானிய மக்களை சிறப்பாக வாழ உதவும் ஒரு இழப்பீட்டு நெறிமுறையை வழங்க முன்வந்தார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்