சிங்கப்பூரில் கிம்மை சந்திப்பதற்கு முன் டிரம்ப் செய்த ஆச்சரிய செயல்: வீடியோவை வெளியிட்ட வடகொரியா

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரிய ராணுவ தலைவருக்கு சல்யூட் அடிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் நேரடியாக சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பான 42 நிமிட வீடியோவை வடகொரிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதில் சிங்கப்பூரில் கிம் ஜோங் உன்னைச் சந்திப்பதற்கு முன்னர், வடகொரிய அதிகாரிகள் அனைவரையும் டிரம்ப் சந்தித்து கைகுலுக்கி வரவேற்றார்.

அப்போது, வடகொரிய ராணுவத்தின் தலைவரும், அமைச்சருமான நோ க்வாங் சோல் No Kwang Chol உடன் கைகுலுக்க முயன்ற போது, அவர் அதைத் தவிர்த்து ட்ரம்பிற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

பதிலுக்கு டிரம்ப் அவருக்கு சல்யூட் அடித்து வணக்கம் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி அந்நாட்டின் ராணுவ தளபதிக்கு சல்யூட் அடித்து வணக்கு தெரிவிப்பது மரபில்லை, ஆனால் அந்த மரபை மீறி டிரம்ப் வணக்கம் தெரிவித்திருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்