நியூசிலாந்தில் 49 பேரை பலி கொண்ட தாக்குதல்! சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்த நபரின் அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் நேற்று தொழுகை நடைபெற்ற போது, திடீரென்று உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக தூப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 49 பேர் பரிதாபமாக பலியாகினர், மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை பொலிசார் கைது செய்திருந்த நிலையில், அதில் ஒருவனை பொலிசார் தைரியாக பிடிக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகியிருந்தது.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

நியூசிலாந்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் முக்கிய நபரை பொலிசார் பிடிக்கும் போது, வீடியோ எடுத்த நபர், அதன் நிலையை தெரியாமல் சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவரின் செயல் மிகுந்த அதிர்ச்சியை கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்