கழிவறை குழிக்குள் நுழைந்த மீன்! அதை எடுக்க உள்ளே கையை விட்ட நபருக்கு நேர்ந்தது என்ன? வைரலான வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவில் உயிரோடு இருந்த மீன் துள்ளி குதித்து கழிவறை குழிக்குள் விழுந்ததால், அதற்குள் கையை விட்ட நபரை அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Taijiang கவுண்டியை சேர்ந்த நபர் ஒருவருக்கு பயங்கரமாக பசியெடுத்த நிலையில் சாப்பிடுவதற்காக மீன் ஒன்றை உயிரோடு பிடித்து வந்தார்.

பின்னர் வீட்டு கழிப்பறை அருகில் இருந்த பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் மீனை போட்டார்.

ஆனால் மீன் துள்ளிகுதித்து வெளியேறி அருகிலிருந்த கழிவறை ஓட்டைக்குள் சென்றுவிட்டது.

இதையடுத்து கழிவறை ஓட்டைக்குள் கையைவிட்டு மீனை எடுக்க அந்த நபர் முயன்ற நிலையில் கை உள்ளே மாட்டி கொண்டது.

இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் அவர் கையை வெளியில் எடுத்துவிட போராடியும் முடியவில்லை.

பின்னர் கழிவறையை உடைத்தெடுத்து அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவரை விடுவித்தனர். ஆனால் உள்ளிருந்த மீனை வெளியில் எடுக்க முடியவில்லை.

இது தொடர்பான வீடியோ ஒரே நாளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்