மூன்று முறை தடுமாறிய விமானம்..! பாகிஸ்தான் விமான விபத்து குறித்து பகிர்ந்த உயிர் பிழைத்த பயணி

Report Print Abisha in ஏனைய நாடுகள்

PIA விமானம் மூன்று முறை தடுமாறி விபத்திற்குள்ளானதாக அதிலிருந்து உயிர் தப்பிய பயணி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் கராச்சி நகரில் நடந்த விமான விபத்தில் கருபுகை வெளியான கோரகாட்சிகள் வைரலானது. இந்த விபத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிர் தப்பிய முகமது சுபேர் என்பவர் விபத்து குறித்து விவரித்துள்ளார். அதில் “விமான எண் PK8303, ஏ320 விமானம் ரம்சான் பண்டிகைக்காகச் செல்லும் பலரையும் சேர்ந்து 91 பயணிகள் மற்றும் 8 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.

விமானம் விபத்திற்குள்ளாகும் என்று நாங்கள் எண்ணவில்லை. ஆனால், மூன்று முறை தடுமாறியது.

காராச்சி ஜின்னா விமான நிலையத்தில் உள்ளுர் நேரப்படி 2.30 தரையிறங்க முயன்றது.

முதலில் ஒருதடவை தரையிறங்க முயற்சி செய்த பிறகு 10-15 நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது என்று சுபேர் தெரிவித்துள்ளார்.

அவர், சிறு காயங்களுடன் அந்த விபத்திலிருந்து தப்பியவர்.

விபத்து நடந்ததும் அவர் தன்னுடைய சுய நினைவை இழந்துவிட்டார். அவருக்கு சுய நினைவு திரும்பியவுடன், அனைத்து பக்கங்களிலிருந்தும் அலறல்களை மட்டுமே தான் கேட்டதாக கூறியுள்ளார். "பெரியவர் சிறியவர் என அனைவரும் அலறினர். சுற்றிலும் நெருப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. மக்களை பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்களின் அலறல் சத்தம் மட்டும் கேட்க முடிந்தது." என்கிறார் சுபேர்.

என்னுடைய சீட்பெல்டை விடுவித்து ஒளிவந்த பக்கம் சென்றேன். நான் பாதுகாப்பாக இருக்க 10 அடி உயரத்திலிருந்து குதிக்க வேண்டியிருந்தது என்கிறார் சுபேர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்