ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் பாவனையாளர்களுக்கென ரோபட்டிக் விரல் ஒன்றை மார்க் டெசீயர் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இவர் தற்போது இதன் தொழிற்பாடு தொடர்பான காணாளியொன்றை வெளியிட்டுள்ளார்.
துல்லியமாகக் கட்டுப்படுத்தக்கூடிய 5 மோட்டர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச் சாதனமானது சாதாரணமாக நமது விரல் போன்றே தொழிற்படக்கூடியது.
மேலும் இது மனித விரல்கள் போன்றே காட்சிதருகிறது.
இதன் சிறப்பு, இது மேசை அல்லது மேற்பரப்பொன்றின் மீது ஸ்மார்ட் போனை தானாகவே நகர்த்திச் செல்லக்கூடியது.
தொலைபோசிக்கு செய்திகள், தகவல்கள் வரும்போது கையின் மீது அல்லது மேசையின் மீது தட்டி சமிக்ஞை செய்கிறது.
மேலும், இது தொலைபேசி இருக்கையாகத் தொழிற்பட்டு அதனை பல கோணங்களில் பேண உதவுகின்றது.
இதோ! நீங்களும் இந்தக் காணெளியைப் பார்த்து இதன் தொழிற்பாட்டை தெரிந்து கொள்ளுங்கள்.