ட்ரோன் விமானம் வைத்திருப்பவர்களுக்கு வருகிறது புதிய நடைமுறை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
165Shares

ட்ரோன் எனப்படும் சிறிய வகை விமானமானது கமெராக்களை இணைத்து வீடியோ பதிவு செய்வதற்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் சில நிறுவனங்களில் பொருட்களை டெலிவரி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் இவ் விமானத்தினைப் பயன்படுத்துவதற்கு உலகளவில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் பின்னரான காலங்களில் இவ் விமானங்களை பயன்படுத்தி தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் சில நாடுகளில் அரங்கேறின.

இதனால் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த வரிசையில் இந்தியாவில் ட்ரோன் விமானங்களை வைத்திருப்பவர்கள் https://digitalsky.dgca.gov.in எனும் இணையத்தளத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு சிவில் விமான சேவை அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறு பதிவு செய்வதற்கான இறுதி திகதி இம் மாதம் 31 ஆம் திகதியாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்