அவருக்கு நான் அதிக தொந்தரவு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

கடலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 மகன்களை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிவாணன் - சிவசங்கரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்துவ்ந்துள்ளது. இதனால் சிவசங்கரி மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது இருமகன்களுக்கு விஷ மருந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் இறந்துபோன மகன்களுக்கு மலர்தூவி அழுதுள்ளார். இதனைத்தொடர்ந்து தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீடு திரும்பிய மதிவாணன் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அழுதுள்ளார்.

சிவசங்கரி தற்கொலை கொள்வதற்கு முன்னதாகக் காவல்துறை மற்றும் உறவினர்கள் அம்மா, தங்கை, மாமா எனத் தனித்தனியாக 4 கடிதங்கள் எழுதி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் என் கணவர் மிகவும் பொறுமையானவர், அவருக்கு நான் அதிகளவு தொந்தரவு கொடுத்துவிட்டேன். எனவே நான் சாகப்போகிறேன்.

என் சாவுக்கும் என் மகன்கள் சாவுக்கும் யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை உடல் கூறாய்வு செய்ய வேண்டாம் என எழுதிவைத்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers