மனைவி தான் விஷம் கொடுத்தார்... உயிரிழப்பதற்கு முன்னர் வீடியோவில் வாக்குமூலத்தை பதிவு செய்த கணவன்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் உயிரிழப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் மனைவி தனக்கு விஷம் கொடுத்ததாக கணவர் வீடியோ பதிவில் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவை சேர்ந்தவர் அவதீஷ். இவர் நேற்று விஷம் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தனது செல்போனில் அவதீஷ் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

அதில் என் மனைவி தான் எனக்கும் பாலில் விஷம் கலந்து குடிக்க வைத்தார் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரித்த நிலையில் அவதீஷும் அவர் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நான்கு நாட்களுக்கு முன்னர் அவதீஷ் வீட்டுக்கு அவரின் மனைவி குடும்பத்தார் வந்தனர்.

பின்னர் அவரை அடித்து உதைத்தோடு, மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தியது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்