வெளிநாட்டில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சுவிஸ் பெண்: வெளியான பின்னணித் தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் இளம்பெண் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்க்கப்பட்டு பிரேசில் நாட்டு மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டில் Tavares Bastos நகரில் நீண்ட காலமாக குடியிருந்து வருபவர் சுவிஸ் நாட்டவரான குறித்த பெண்.

37 வயது நிரம்பிய இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் Renan Leandro Figueiredo என்பவரை சந்தித்துள்ளார்.

இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறி பின்னர் இருவரும் திருமணம் செய்து கோண்டுள்ளனர்.

இந்த நிலையில் Renan ஆயுதக் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவதித்துள்ளதுடன், அவரை கண்காணிக்கும் பொருட்டு அதிகாரிகள் மின்னணு விலங்கு ஒன்றை அணிவித்து அனுப்பியுள்ளனர்.

இதனிடையே தமது கணவரை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற சூரிச் பெண்மணி கடுமையாக போராடி வந்துள்ளார்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் இருவரும் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். செவ்வாய் அன்று மாலை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் குறித்த சூரிச் பெண்மணி அவரது நண்பர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்மணியை துப்பாக்கியால் தாக்கியவர்கள் சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தீவிரமாக தேடிவருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers