வானிலிருந்து தலைகுப்புற விழுந்த விமானம்... அதைக் கண்டு அதிர்ந்து இரு முறை பொலிசாரை அழைத்த நபர் சொன்ன செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் வானிலிருந்து விமானம் ஒன்று விழுவதைக் கண்டு அதிர்ந்த ஒருவர், பொலிசாரை அழைத்து, தான் விமானம் ஒன்று விழுவதைக் கண்ணால் கண்டதாக தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்களுக்குள் மீண்டும் பொலிசாரை அழைத்த அதே நபர், மிரட்சியுடன், விமானம் விழுந்த இடத்திலிருந்து கரும்புகை எழுவதாக தெரிவித்துள்ளார்.

சுவிஸ் பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலையின் 3,000 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள Gletscherspitze சிகரத்தில், உள்ளூர் நேரப்படி 12.25க்கு அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக Wallis மாகாண பொலிசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு ஹெலிகொப்டர் ஒன்றில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், விமானத்தில் பயணித்த 50 மற்றும் 66 வயதுடைய இரண்டு சுவிஸ் நாட்டவர்கள், மற்றும் 46 மற்றும் 50 வயதுடைய இரண்டு ஆஸ்திரிய நாட்டவர்கள் ஆகிய நால்வருமே உயிரிழந்துவிட்டதைக் கண்டுள்ளனர்.

இந்த விமான விபத்து எதனால் நிகழ்ந்தது என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்