சுற்றுலா சென்ற பிரித்தானியர்கள் மீது கொடூர தாக்குதல்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

சுற்றுலா தீவான மயோர்க்காவில் பிரித்தானியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயோர்க்காவின் தலைநகரான பால்மாவிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, சுற்றுலாவாசிகள் இருவருக்கும் 25 வயதிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இவர்களை வழிமறித்து ஐந்து பேர் திருட முயன்றுள்ளனர், அப்போது ஒருவரை கொடூரமாக தாக்கி கடலுக்கு வீசியுள்ளனர்.

மற்றொருவர் பொலிசுக்கு தகவல் அளிக்கவே சுதாரித்துக் கொண்ட திருடர்கள் குழு தப்பியோடியுள்ளது.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கடலுக்கு விழுந்தவரை மீட்டுள்ளனர், தலையில் அடிபட்ட காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோவை கொண்டு பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மொபைல் போனில் பதிவான காட்சிகளில் திருடர்களின் முகம் தெளிவாக தெரிகிறது, மற்றொரு வீடியோவில் அவர்களின் பெயரும் தெளிவாக கேட்பதால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படலாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...