லண்டன் இரயில் நிலையத்தில் மரணத்தை தொட்டு பார்த்து வந்த பெண்: அதிர்ச்சியடைந்த பயணிகள்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் பெண் ஒருவர் இரயிலின் கதவுகளுக்கிடையே சிக்கிக் கொண்டதால், அவர் அந்த நிலையிலே இழுத்துச் சென்ற சம்பவத்தைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Notting Hill Gate பகுதியில் உள்ள இரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவரின் பை மற்றும் கோட், இரயிலின் கதவுகளில் சிக்கியது.

இதனால் அப்பெண் கீழே விழுந்தார். அந்த நிலையிலே அவர் தர தரவென இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளனர்.

அந்த பெண்ணும் உதவி, உதவி என்று கத்தியுள்ளார். அதன் பின் இரயில் நிறுத்தப்பட்ட நிலையில், பத்திரமாக அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தைக் கண்ட பயணி ஒருவர் தெரிவிக்கையில், பெண்ணின் கோட் மற்றும் பை இரயிலின் கதவுக்கிடையில் சிக்கிக் கொண்டதால், அப்பெண் கிழே விழுந்தார். இதன் காரணமாக அவர் பிளாட்பார்ம்பில் இருந்து தர தரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

நாங்கள் அவள் எப்படியும் பிழைக்கமாட்டாள் என்று நினைத்தோம். ஏனெனில் அவள் அப்படி கத்தினாள். உதவி, உதவி என்றாள், எங்கள் கண்களில் கண்ணீர் நின்று கொண்டிருந்தன. கிட்டத்தட்ட சொல்லப்போனாள் மரணத்தை தொட்டு பார்த்திருப்பாள் என்று கூட கூறலாம்.

இருந்த போதிலும் இரயிலின் உள்ளே இருந்த பயணிகள் சமார்த்தியமாக செயல்பட்டதால், இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. சம்பவத்தை அறிந்த வந்த பொலிசார், மீட்பு அதிகாரிகளின் உதவியுடன் கதவிலிருந்து பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் காயங்கள் இருந்ததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers