காணாமல் போன பிரித்தானிய பாடகர் சடலமாக கண்டுபிடிப்பு

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் காணாமல் போன பிரபல பாடகர் Scott Hutchison சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்து பாடகரான Scott Hutchison(36) கடந்த புதன்கிழமையன்று மாயமானார், கடைசியாக அவர் Dakota ஓட்டல் அருகில் சென்ற காட்சி, அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

முன்னதாக, செவ்வாய் அன்று Hutchison ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில், ‘நீங்கள் விரும்பும் எல்லோரிடமும் நல்லவராக இருங்கள். இது கொடுக்கப்பட்டதல்ல. இது இல்லை என்பதால் நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்.

நான் அந்த தரத்தில் வாழவில்லை மற்றும் அது என்னை கொல்கிறது. தயவு செய்து உங்களை விரும்புபவரை அணைத்துக் கொள்ளுங்கள். நான் இப்போது இருக்கிறேன். நன்றி’ என தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட்டைப் பார்த்த Hutchison-யின் குடும்பத்தினர் கவலையடைந்தனர், இதனைத் தொடர்ந்து, பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில், தெற்கு Queensferry-க்கு அருகில் உள்ள Port Edgar என்னும் இடத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Hutchison-யின் குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறும் பொலிசார், இது பாடகரின் சடலம் தானா என்பது விரைவில் உறுதிப்படுத்தப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers