பிரித்தானிய மகாராணியாரை பார்த்திருக்கிறீர்களா என்று ஒரு பெண்மணியிடம் கேட்ட சுற்றுலாப்பயணிகள்: அந்த பெண்மணி?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பால்மோரல் எஸ்டேட்டுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் அங்கு வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் நீங்கள் மகாராணியாரைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள்.

அந்த பெண்மணி வேறு யாருமில்லை, சாட்சாத் மகாராணியாரேதான்! பால்மோரல் எஸ்டேட்டுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் அங்கு வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம், நீங்கள் இந்த பகுதியிலா வசிக்கிறீர்கள் என்று கேட்க, அவரும் ஆம், பக்கத்தில்தான் என்னுடைய வீடு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தாங்கள் பிரித்தானிய மகாராணியாரிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் அவர்கள் அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மகாராணியாரை அடையாளம் தெரியவில்லை, காரணம் மகாராணியார் எளிமையாக, குளிரைத் தாங்கும் வகையிலான ஒரு உடையையும் தலையில் ஸ்கார்பையும் அணிந்திருந்தார்.

வெளிநாட்டவர்கள் பலர், பளிச்சென்ற உடை அணிந்த மகாராணியாரைத்தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால் மகாராணியார் பால்மோரல் எஸ்டேட்டில் இருக்கும்போது எளிமையாகத்தான் உடையணிவார்.

அத்துடன், தனது பாதுகாப்புக்கு, தன்னுடன் Richard Griffin என்னும் ஒரு பொலிசாரை மட்டுமே அழைத்துச் செல்வார்.

எனவே மகாராணியாரை அடையாளம் தெரிந்து கொள்ளாத அந்த அமெரிக்க சுற்றுலாப்பயணிகள், அப்படியென்றால் பிரித்தானிய மகாராணியாரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள்.

உடனே ராணியும் நகைச்சுவையாக, நான் பார்த்ததில்லை, ஆனால் இந்த பொலிசார் அவரை பார்த்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

அதை அப்படியே நம்பிய அந்த சுற்றுலாப்பயணிகளும், சிறிது நேரத்திற்குப்பின், தாங்கள் சந்தித்த நபர்தான் மகாராணியார் என்பதை அறியாமலே அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கிறார் Richard Griffin.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்