பிரித்தானியாவில் வீடு இல்லாமல் சாலையில் வசித்து வரும் நபர் மீது காபியை கொட்டி அவரை சிலர் மோசமாக நடத்திய நிலையில் பாதிக்கப்பட்டவரின் பின்னணி குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
Liverpool சிட்டி செண்டர் வாசலில் உட்கார்ந்திருக்கும் ஜான் என்பவர் கையில் பதாகை ஒன்றை வைத்திருக்கிறார்.
அதில், என் பெயர் ஜான், எனக்கு 40 வயதாகிறது. என்னுடைய வேலை பறிபோன காரணத்தினால் என் வீட்டை இழந்து சாலையில் வசிக்கிறேன்.
தற்போது வேலையை எதிர்பார்க்கிறேன் என எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து ஜான் கூறுகையில், நான் சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணி செய்து வந்தேன்.

என் விரல் துண்டானதால் அந்த பணியை செய்ய முடியாமல் வேலை பறிபோனது. அதனால் அனைத்தையும் இழந்தேன், சாலையில் வசிப்பதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளேன்.
என் மீது சில வேண்டுமென்றே காபியை கொட்டி விட்டு சென்றார்கள், இதில் என் உடமைகள் அனைத்து நனைந்துவிட்டது, இது போன்ற அவமானங்களை சந்தித்து வருகிறேன்.
ஒரு காலத்தில் நான் மது மற்றும் போதைக்கு அடிமையாக இருந்தேன், ஆனால் அதிலிருந்து மீண்டுவிட்டேன்.
என் மனைவியும் சாலையில் கூடாரம் அமைத்து மிகுந்த கஷ்டத்துடன் தான் தங்கியுள்ளார் என வேதனையுடன் கூறியுள்ளார்.
