மர்மமான முறையில் மாயமான பிரித்தானிய சிறுமி: கிணறுகளில் தேடும் பொலிசார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
146Shares

போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான பிரித்தானிய சிறுமியின் உடலை கிணறுகளில் தேடி வருகிறார்கள் பொலிசார்.

13 ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்றபோது மகள் மேட்லினை தவறவிட்டனர் பிரித்தானியர்களான அவளது பெற்றோர்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும், அவள் என்ன ஆனாள், உயிருடன் இருக்கிறாளா, அல்லது கொல்லப்பட்டு விட்டாளா என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

குழந்தைகளை வேட்டையாடும் மிருகமாகிய Christian Brueckner என்னும் ஜேர்மானியன்

ஒருவன் மேட்லினை கொன்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கும் நிலையில், அதை நிரூபிக்க அவர்கள் வசம் வலிமையான ஆதாரம் எதுவும் இல்லை.

தற்போது எப்படியாவது மேட்லினின் உடலாவது கிடைக்காதா என தீவிரமாக தேடி வருகிறார்கள் பொலிசார்.

அதன் ஒரு கட்டமாக, போர்ச்சுகல்லில் மேட்லின் பெற்றோருடன் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆறரை மைல் தொலைவிலுள்ள ஒரு கிணற்றில் உடல் பாகங்கள் ஏதாவது கிடைக்குமா என தேடினார்கள் பொலிசார்.

அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் சுமார் 20 கிணறுகள் உள்ளதால், அவை அனைத்தையும் தேடிப்பார்த்துவிடுவது என்ற முடிவுடன் இறங்கிவிட்டார்கள் பொலிசார்.

தீயணைப்பு வீரர்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் என 15 பேர் அடங்கிய வலிமையான ஒரு மீட்புக்குழு 12 மணி நேரம் குறித்த கிணற்றில் தேடுதல் வேட்டையில் இறங்கியது.

Christian Bruecknerஇன் வேன் அந்த பகுதியில் அடிக்கடி காணப்பட்டதாக ஒருவர் ரகசிய துப்புக் கொடுத்ததைத் தொடர்ந்து பொலிசார் கிணறுகளில் தேடும் பணியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்