காஷ்மீருக்கு செல்லாதீர்கள்! மக்களை முன்னரே எச்சரித்த நாடு.. வெளியான தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்கா கடந்த 13ஆம் திகதி தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில் சுதந்திர காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என அறிவுறுத்தியது தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில் சுதந்திர காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என அறிவுறுத்தியுள்ளது. வழக்கமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே அமெரிக்கா தனது அறிவிப்புகளில் பாகிஸ்தானை குறிப்பிடும்.

ஆனால் இந்தியா அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தக போர் காரணமாக தற்போது காஷ்மீரை சுதந்திர காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தாக்குதலுக்கு முந்தைய நாளே அமெரிக்கா தனது நாட்டு பயணிகளை எச்சரித்திருக்கும் நிகழ்வு, அமெரிக்காவிற்கு ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பின்மை அல்லது தாக்குதல் குறித்த விபரங்கள் ஏதேனும் தெரியுமா என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers