திட்டம் இது தான்... போர் விமானங்களை அனுப்பி வைத்த டிரம்ப்: உருவாகும் போர் பதற்றம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
717Shares

ஈரான் நாட்டை எச்சரிக்கும் பொருட்டு சக்தி வாய்ந்த போர் விமானங்களை டிரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கு நாடுகளுகு அனுப்பி வைத்துள்ளது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானை குறிவைத்து ஜனாதிபதி டிரம்ப் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஈரானுடன் போருக்கு வழிவகுக்கலாம் என்ற எச்சரிக்கையை மீறி தற்போது போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி மாதம் ஜோ பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் முன்னர், ஈரான் மீது தாக்குதல் தொடுக்கலாமா என டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஈரானுடனான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டதுடன், கடுமையான கருத்து மோதல்களும் ஏற்பட்டன.

மட்டுமின்றி கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறையாக டிரம்ப் நிர்வாகம் ஈரானை குறிவைத்து எச்சரிக்கும் வகையில் போர் விமானங்களை அனுப்பியுள்ளது.

தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள 3 அணுஆயுதம் தாங்கும் போர் விமானங்களும் அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து, கட்டாரில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அணுஆயுத ஏவுகணை தொடர்பில் அமெரிக்காவின் இரட்டை நிலையை விமர்சித்த ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி,

பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏவுகணைகளை வைத்திருக்கும்போது எங்களை வைத்திருக்க கூடாது என்கிறார்கள். அமெரிக்கா முதலில் தன்னை திருத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது பயனற்றது என்பதை நாடுகள் உணருவரை ஈரான் தனது எதிர்ப்பை தெரிவிக்கும்.

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு பல வருடங்களாக முயற்சித்தோம். ஆனால் முடிவு கிடைக்கவில்லை. அமெரிக்கா எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுகிறது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்