23 பெண்களை கற்பழித்த 41 வயது நபர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Report Print Santhan in ஜேர்மனி
572Shares
572Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் 23 பெண்களை கற்பழித்த 41 வயது நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜேர்மனியைச் சேர்ந்த 41 வயதான பாராமெடிக் மருத்துவர், கர்ப்பிணி பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டார்.

அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணை சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெயர் தெரிவிக்கப்படாத இந்த நபர் நம்பிக்கை தரும் வகையில் புற்றுநோய்க்கான ஒரு மருத்துவ சோதனை நடத்தி வந்தாகவும், அப்போது அதற்காக வரும் பெண்களிடம் தனியாக பேசி, அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவர்களை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் கடந்த 2009 முதல் 2016-ஆம் ஆண்டுகளுக்குள் 23 பெண்கள் இவனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி குறித்த நபர் Nuremberg பகுதியில் இருக்கும் University of Erlangen-ல் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடந்து இது தொடர்பான வழக்கு நிதிமன்றத்தில் நடைபெற்று வந்தால், குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்